நாசரேத்தில் கஞ்சா, புகையிலை,பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்.!

police

நாசரேத்தில் கஞ்சா, புகையிலை,பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸ்.!

நாசரேத்தில் கஞ்சா, புகையிலை,பாலியல் குற்றங்கள் குறித்து போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

நாசரேத்,ஆக.11:

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவ ணன் உத்தரவின்படி நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்படபொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட் டது. இதுவரை 3362 "மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு கூட்டங்கள் காவல் துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 97,567 பொதுமக்களிடம் உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எபனேசர் தலைமையிலான போலீசார் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெய்விளை பகுதியில் பொதுமக்களிடமும்,  ‘மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், காவலன் SOS செயலி குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச உதவி எண்களான 1098, 1091, 181 ஆகிய செல்போன் எண்கள் குறித்தும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், சாலை விதிகள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மேற்படி காவல்துறையினரின் முன்னிலையில் கீழ்கண்டவாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.  ‘நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்” என்னும் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பொதுமக்கள் அனைவரும் ஏற்று குற்றங்கள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.