கடந்த முறையைவிட இந்த முறை கனிமொழியின் வெற்றி மிகப்பெரியதாக இருக்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்

DMK Election news

கடந்த முறையைவிட இந்த முறை கனிமொழியின் வெற்றி மிகப்பெரியதாக இருக்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்

கடந்த முறையைவிட இந்த முறை கனிமொழியின் வெற்றி மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்று திமுகவினரிடம் அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.  

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சண்முகபுரம், பிரையண்ட்நகர், பகுதிக்குட்பட்ட பாக முகவர்கள் கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதற்கு, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார்.  

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு கட்சியினர் மத்தியில் பேசினார். அப்போது அவர், இந்தியாவில் 3வது பெரிய கட்சியாக திமுக கட்சிதான் இருந்து வருகிறது. திமுக ஆட்சி அமைந்த பின் கலைஞர் வழியில் தளபதியார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் தமிழகத்திற்கு எதிரான உதய்மின்திட்டம், நீட் தேர்வு, குடியுரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், உள்ளிட்ட பலசட்டங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலையாட்டி பொம்மையாக இருந்து கொண்டு ஆதரித்தார். இப்போது பிஜேபியுடன் தொடர்பு இல்லை என்று சொல்லி இரண்டு பேருமே கள்ளக்கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்ற வருகிறார்கள். அதற்கு இடம் அளிக்க கூடாது.

நமது ஆட்சியின் சாதனைகளை வீடுதோறும் எடுத்துச்சென்று கட்சிக்கும் ஆட்சிக்கும் வலிமை சேர்க்க வேண்டும் வரும் நாடாளுமன்ற தோ்தலில் திமுகவை எதிர்த்து நிற்கும் கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது. ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம் என்ற அடிப்படையில் தங்களது பகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் நேரில் சந்தித்து வாக்குகளை கேட்க வேண்டும். அதில் உங்களது களப்பணிகள் சிறப்பாக அமைய வேண்டும். 

கடந்த முறை கனிமொழி பெற்ற வெற்றியை விட இந்த முறை மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தருவதற்கு பணியாற்றி முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதே போல் கடந்த ஆண்டு எதிர்பாராமல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ள பாதிப்பின் போது எல்லா தரப்பினருக்கும் நாம் ஒவ்வொரு பகுதியிலும் உதவிகள் செய்து மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றியுள்ளோம் என்பது பொதுமக்களுக்கு தெரியும். அதிமுக பிஜேபி கட்சிகளுக்கு வரும் தோ்தலில் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். மோடியின் ஆட்சியில் தமிழகத்திற்கு எதிரான செயல்களையும் வாக்காளர்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று பேசினார். 

கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், சுரேஷ், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, முக்கையா, லியோஜான்சன், கங்காராஜேஷ், பொன்ராஜ், கதிரேசன், முனியசாமி, சுரேஷ், மாரிச்செல்வம், கவுன்சிலர்கள் வைதேகி, சரண்யா, ரெக்ஸ்லின், விஜயலட்சுமி, பாப்பாத்தி, பேபி ஏஞ்சலின், சரவணக்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.