தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியும், பாராட்டுதலும்.!

Thoothukidi collector

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியும், பாராட்டுதலும்.!

மழை நின்றது, தண்ணீர் வரத்து குறைந்தது என்று ஆபத்தை தவிர்க்கும் பொருட்டு நிம்மதி பெரும்மூச்சுவிடலாம். இனிமேல் இந்தாண்டுக்கான மழை நிலவரத்தை பொருத்து தண்ணீரை சேமித்து வைக்கும் வழிமுறையை தேட வேண்டும்.

தண்ணீர் வர வர வெளியேற்றிக் கொண்டே இருந்ததின் வெற்றியே தற்போது கடந்துவிட்ட மழை நாட்கள். இனி வரும் காலங்களிலும் இதுபோல் தண்ணீரை கையாளும் அடிப்படையை உருவாக்க வேண்டும். தற்போதுள்ள கலெக்டர் இளம்பகவத் அவர்கள் காலத்தில் அதை செய்ய வேண்டும். தொலை நோக்கு சிந்தனை உள்ள அதிகாரிகளே நிலையான செயலுக்கு அடித்தளம் அமைக்க முடியும். அந்த வகையில் தற்போதைய கலெக்டர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து திட்டமிட வேண்டும்.

தூத்துக்குடி மாநகரை பொருத்தவரை மாநகர் மற்றும் சற்று தூரத்தில் இருந்து வரும் மழை நீர் பக்கிள் ஓடை மூலமாக எளிதில் வெளியேறிவிடும். ரூரல் பகுதியில் இருந்து அதாவது புதுக்கோட்டை பாலம் வழியாக செல்ல வேண்டிய தண்ணீர் போகமுடியாமல் மாநகருக்குள் வந்தால்தான் பிரச்சினை. தற்போது மேயர் ஜெகன் பெரியசாமி தீவிரமாக செயல்பட்டு மாநகர் பகுதியில் பிரச்சினை வராமல் பார்த்து வருகிறார்.

எனவே புதுக்கோட்டை புதிய பழைய பாலம் வழியாக தண்ணீர் செல்லும் வழித்தடத்தை க்ளீன் செய்ய வேண்டும். குமாரகிரி ஊராட்சியில் உள்ள பெரியபிராட்டி குளம் நிரைந்து தண்ணீர் வெளியேறும் வழித்தடத்தையும் க்ளீன் செய்ய வேண்டும். இங்குள்ள ஆக்கிரமிப்புகளே இந்த வெள்ள பாதிப்புகளின் பெரும்பாலானவைகளுக்கு முக்கிய காரணம். மொத்தத்தில் கோரம்பள்ளம் 24 மதகுகளை சரியாக கையாள வேண்டும். 

வழியோர கிராமங்கள் பாதிக்காதவாறு தண்ணீரை அதிக அளவில் திறந்துவிட வேண்டும். அக்கிராம பகுதியில் சிமெண்ட் கொண்டு கரைகள் அமைக்க வேண்டும். குளத்தை தூர்வாரிய அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு வாரினார்களோ தெரியாது அதிகாரிகள் அவர்கள் கடமையை முழுமையாக செய்ய வேண்டும்..கடந்தாண்டு வெள்ள சேதத்தை வைத்து பார்க்கும் போது, இந்தாண்டு சிறப்பாக கையாளப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. உடனுக்குடன் தண்ணீர் வெளியேற்றப்பட்ட இருக்கிறது.

அவசியமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். தேவையான இடங்களுக்கு பாலங்கள் கட்ட வேண்டும். சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். பிரச்சினை வரவே வராது. சிறு மழைக்கு கூட போக்குவரத்து நிறுத்தம் என்கிற நிலை மாற வேண்டும்.

ஆர்.எஸ்.சரவணப்பெருமாள், பத்திரிக்கையாளர் 
8056585872