வேண்டாத களைகளைப் பிடுங்கி தேவையானதை விளைவிப்பதே என் மண் என் மக்கள் யாத்திரை

EN MAN EN MAKKAL

வேண்டாத களைகளைப் பிடுங்கி தேவையானதை விளைவிப்பதே என் மண் என் மக்கள் யாத்திரை

வேண்டாத களைகளைப் பிடுங்கி, சரியானதை நடவு செய்து,  முறையாக நீரை பாய்ச்சி, தேவையானதை விளைவிப்பதே அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை என்று கல்வியாளர் Dr K. சுதா தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 

மண்ணை நேசித்தால் மட்டுமே மக்களை காக்க முடியும். மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை 234 தொகுதிகளிலும் மக்களிடம் விளக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் என்ற நடைபயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மொத்தம் 168 நாட்கள் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த பயணம் நடைபெற உள்ளது. மண்ணிற்கும் மக்களுக்கும் இருக்கின்ற முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக இந்த நடைபயணம் அமையவிருக்கின்றது. 

மண் என்பது ஒரு உயிரியல் சுற்றுச்சூழல் அமைப்பாகும், அதில் எந்த உயிரினங்களும், அவற்றின் வளர்ச்சி மற்றும் முக்கிய செயல்பாடு சார்ந்துள்ளது. எதிர்கால அறுவடை என்பது, அதன் கலவை மற்றும் பண்புகளால் தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான் நமது அண்ணாமலை அவர்கள் என் மண் என்ற தலைப்பை தலையாயமாகக் கொண்டு எதிர்கால சந்ததியினருக்கு நல்ல அறுவடை நடக்கும் நிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

மண்ணின் நிலம் எவ்வாறு உழுதுண்டு இருந்தால் விவசாயம் செழிக்குமோ., அதை போல் தமிழகத்தை ஊழல் செய்யும் பெருச்சாளிகள் இடம் இருந்து காப்பாற்றினால் மட்டுமே தமிழகம் செழித்து தலைத்தோங்கும். அதை முன்னெடுக்கும் களை எடுப்பாக தான் என் மண் என் மக்கள் என்னும் யாத்திரையில் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் நமது அண்ணன் அண்ணாமலை அவர்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வேண்டாத களைகளைப் பிடுங்கி எடுத்து சரியான நடவு நட்டி, முறையான நீரை பாய்ச்சி, சரியான மகசூலை விலை நிலங்களுக்கும் விளைவித்த மக்களுக்கும் வழங்கும் எண்ணத்தில் என் மண் என் மக்கள் என்னும் யாத்திரையில் பயணிக்கிறார் நமது அண்ணாமலை அவர்கள்.

இயற்கை வளமானது எந்த மண்ணிலும் இயல்பாகவே உள்ளது, அதைப் போல் தமிழ் நாட்டின் வளங்களோ ஏராளம். ஆனால் அதை கயவர்கள் கூட்டம் சுரண்டி, பதுக்கி மக்களுக்கு தேவையான மகசூலை கொள்ளையடிக்கும் கொள்ளைக்கார கூட்டம் தான் நிரம்பி வழிகின்றது விவசாயப் பொருட்களை வளர்க்க நல்ல உரங்கள் தேவை இது போலவே, தமிழக மக்களின் வளர்ச்சிக்கு மற்றும் முன்னேற்றத்திற்கு சரியான உரமாக நல்ல தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் மண் வளத்தை மீட்டெடுப்பது விவசாயத்தில் தேவையான வேளாண் தொழில்நுட்ப நுட்பமாகும்.

தமிழகத்தை மீட்டெடுப்பது நமது அண்ணன் அண்ணாமலை அவர்களின் மதிநுட்பமாகும். விளை நிலங்களை தொடர்ந்து செயற்கையாக மேம்படுத்துவதன் மூலம், பயிர்களை விற்பதன் மூலம் செலவுகளை ஈடுகட்டவும், ஆண்டு வருமானம் பெறவும் முடியும். தமிழக மண்ணின் மைந்தர்களுக்கு நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கொள்கைகளை எடுத்தியம்பினால் மட்டுமே கொள்கை செழிப்புடன் தமிழகம் தலைத்தோங்க முடியும். விவசாய நிலங்களுக்கு மண்ணின் பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ அதைப்போல் தமிழக மண்ணின் வளத்தையும் மக்களையும் பாதுகாப்பது நமது அண்ணன் அண்ணாமலை அவர்களின் கடமையாகும். இதனை கருத்தில் கொண்டு தான் நமது அண்ணன் அண்ணாமலை அவர்கள்.

செருக்குடனும்,துணிவுடனும், என் மண் என் மக்கள் என்ற கருத்தை மையமாகக் கொண்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து வகையான மக்களையும் சந்தித்து அவர்களுக்காக குரல் கொடுக்கிறார். இந்த யாத்திரை ஒரு வெற்றியாத்திரையாக, வருகின்ற நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவை அமோகமாக வெற்றியடைய செய்ய உதவும் யாத்திரையாக, மீண்டும் மோடி அவர்களை பிரதமராகவும், தமிழகம் தாமரையோடு மலர்ந்து தமிழகத்தின் தவப்புதல்வன் அண்ணாமலை அவர்கள் தலைமையில் தமிழகம் வளர்ந்து செழித்தோங்கிட வணங்கி வரவேற்போம், வாழ்த்தி பங்களிப்போம்.