தூத்துக்குடி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்

Thoothukidi News

தூத்துக்குடி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்

தூத்துக்குடி மாநகரத்தின் முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அலைந்து திரியும் கால்நடைகளை வளர்ப்போர் தங்களுக்கு சொந்தமான இடங்களில் கொட்டில் அமைத்து பராமரிக்குமாறு மாநகராட்சி சார்பில் பல தடவை அறிவிப்புகள் செய்யப்பட்டது. ஆனாலும் தற்போது மாநகரின் பிரதான சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகிறது. 

இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு சாலைகளில் சுற்றித்திரிந்த 24 மாடுகளை பிடித்தனர். மேலும் அதன் உரிமையாளர்களிடமிருந்து ரூ.80,000/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கூறுகையில், கால்நடை வளர்ப்போர் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் கொட்டில் அமைத்து முறையாக பராமரிக்குமாறு மாநகராட்சி சார்பில் மீண்டும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலை தொடருமாயின் அபராத தொகை  கூடுதலாக விதிப்பதோடு, கால்நடையின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.