நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் துலுக்கன்குளம் கால்வாய் தூர் வாரும் பணி!

Nalumavadi News

நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் துலுக்கன்குளம் கால்வாய் தூர் வாரும் பணி!

நாசரேத்,ஆக.18: நாலுமாவடி புதுவாழ் வுசங்கம் சார்பில் துலுக்கன்குளம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற் றது.

தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சா பில் நடைபெற்று வரும் புது வாழ்வு சங்கம் பல்வேறு சமுதாயப் பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை 11 மணியளவில் துலுக்கன்குளம் மடை எண் ஒன்றான துலுக்கன்குளம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது. இக்கால்வாய் தூர்வாரப்படுவதினால் சுமார் 272 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கால்வாய் தூர் வாருவதினால் இராணிமகாராஜபுரம் அடைக்கலாபுரம், கோயில்விளை, வன்னிமாநகரம், நத்தகுளம், கானியாளன் புதூர், கானம் ஆகிய கிராம ங்கள் பயன் பெறுகின்றன. சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் தூர் வாரும் பணியை விவசாய சங்க தலைவர் தனசேகர் தலைமையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊ ழியதகவல் தொழில் நுட்பத் துறை தலைமைப் பொறுப்பாளர் கிளமெண்ட் எபனே சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இந்நிகழ்வில் துலுக்கன்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் தனசேகர், முன்னாள்தலைவர் ராஜபாண்டி, மடை உறுப்பினர்கள் கோயில்விளை கணேசன், சொர்ணகோபி, கனகராஜ், பால்ராஜ், விவசாய சங்கம் அம்மன்புரம் ஆறுமுகம், கவுரவ ஆலோசகர் கடற்கரை தங்கம், வண்ணான்குளம் தலைவர் உதய்சிங், நீர்வளத்துறை பாசன ஆய்வாளர் முத்துக்குமார், பாசன உதவியாளர் சுடலைமுத்து, இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத்துறை எட்வின், பிஆர்ஓ சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமையில் பொதுமேலாளர் செல்வக்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.