தமிழ்நாடு காங்கிரஸ் நிதிக்குழு உறுப்பினராக ஸ்ரீவை.எம் எல் ஏ. ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் நியமனம்
Uoorvasi Amirtharaj Mla
தமிழ்நாடு காங்கிரஸ் நிதிக்குழு உறுப்பினராக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1ஆம் தேதி தூத்துக்குடி நாடாளுமன்ற காங். பொறுப்பாளராக எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நியமனம் செய்திருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங் தலைவரும், ஸ்ரீவை சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி எஸ் அமிர்தராஜை தமிழ்நாடு காங் நிதிக்குழுவிலும் உறுப்பினராகசெல்வபெருந்தகை நியமித்துள்ளார்.
இதனையடுத்து தமிழ்நாடு காங்.தலைவருக்கு எம்.எல்.ஏ.ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் நன்றி தெரிவித்தார்.