தூத்துக்குடி பாஜக கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் உற்சாகத்தோடு வேட்பு மனு தாக்கல் செய்தார்

BJP NEWS

தூத்துக்குடி பாஜக கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் உற்சாகத்தோடு வேட்பு மனு தாக்கல் செய்தார்

தூத்துக்குடி பாஜக கூட்டணி வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தொண்டர் படையுடன் சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார். பாஜகவினர் அதிகமானோர் கூடியதால் அவர் உற்சாகம் அடைந்தார். 

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். இந்த தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்படும் என்று பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் பாஜக வினர் மத்தியில் சல சலப்பு ஏற்பட்டது. அது அதிருப்தியாக மாறிவிடுமோ என்று இரு கட்சி நிர்வாகிகளும் கலக்கத்தில் இருந்தனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தால் வேட்பாளர் விஜயசீலன் இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தபோது அதிக அளவில் பாஜகவினர் குவிந்தனர்.  இது பாஜக, த.மா.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்கிற ஒற்றை லட்சியத்தோடு இணைந்து பணியாற்றுவோம் என்கிறார்கள் பாஜகவினர். 

இன்று(27.03.2024) காலை குருஸ்பர்னாந்த் சிலை முன்பிருந்து வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், பாஜக, த.மா.கவினர் பைக், வேன், கார்களில் கிளம்பி தலைவர்கள் சிலைகளுக்கெல்லாம் மாலை அணிவித்துவிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கும் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். இதில் எஸ்.டி.ஆர் ஊற்சாகம் அடைந்தார். மாவட்ட ஆட்சித்தலைவரும், தேர்தல் அலுவலருமான லட்சுமிபதியிடம் அவர் மனுதாக்கல் செய்தார்.

குருஸ்பர்னாந்த் சிலை அருகில் கூடி ஊர்வலகமாக செல்ல வேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டமாக இருந்தது. அதற்காக வெளியில் இருந்து வந்த வாகனங்கள் பல எப்படி அங்கு செல்வது என்று தெரியாமல் முன்னதாகவே கலெக்டர் அலுவலகம் முன்பு சென்றது. அதுபோல் பாஜக ஊர்வலத்தின் போது மற்ற வாகனங்களை தடுத்து ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸ் ஈடுபட்டதாக தெரியவில்லை. அதனால் ஊர்வலமாக சென்ற வாகனங்கள் மற்ற வாகனங்களுக்கு நடுவே செல்லும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து வி.ஜி ரோட்டில் காரியாலயம் திறக்கப்பட்டது. வேட்பாளருடன் பாஜகவின் தெற்கு, வடக்கு மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் த.மா.கவினர் உடனிருந்தனர்.