சி.எஸ்.ஐ. கரீம்நகர் பேராயர் ரூபன் மார்க் மாடரேட்டராக தேர்வு !

CSI Diocese

சி.எஸ்.ஐ. கரீம்நகர் பேராயர் ரூபன் மார்க் மாடரேட்டராக தேர்வு !

சி.எஸ்.ஐ. சினாடு பேரவைக்கு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் திருமண்டல பேராயர் டாக்டர் ரூபன் மார்க் மாடரேட்டராக தேர்வு செய்யப்பட்டார்.

தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) சினாடு பேரவை பொதுக்குழு கூட்டம்  சென்னை திருமண்டலத்தின் லைட் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இலங்கை யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 25 திருமண்டலங்களில் உள்ள சினாடு கவுன்சில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாக்களித்தனர்‌. இத் தேர்தலை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவின் பேரில் முன்னாள்  நீதிபதி வி. பாரதிதாசன் தலைமை தாங்கி நடத்தினார்.

இதில் பிரதம பேராயராக தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் திருமண்டல பேராயர் டாக்டர் கே. ரூபன் மார்க் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக அட்வகேட். சி. பெர்னாண்டஸ் ரத்தின ராஜா,  கௌரவ பொருளாளர்  டாக்டர் பி. விமல் சுகுமார், ஆகியோரை சினோட் கவுன்சில் பிரதிநிதிகள் ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்தனர்.

பின்னர் நடைபெற்ற விழாவில் முன்னாள் நீதிபதி பாரதிதாசன் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.