துணிச்சலுடன் தேசியவாதத்தை ஆதரித்த கேப்டன் மறைவு.. ஒரு தேசியவாதியை இழந்தது தமிழகம்..

Vijayakanth

துணிச்சலுடன் தேசியவாதத்தை ஆதரித்த கேப்டன் மறைவு.. ஒரு தேசியவாதியை இழந்தது தமிழகம்..

திராவிட கொள்கையோடு சினிமாக்குள் புகுந்தவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த். தேசியத்தை துணிவுடன் ஆதரித்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். புகழில் இரண்டு துறையிலும் உச்சத்தில் இருந்தவர் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த். ஆரம்பகால சினிமாக்களில் திராவிட கொள்கைகளை சுமந்தவராக காணப்பட்ட அவர், காலப்போக்கில் அனைவருக்குமான தலைவராக, அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தலைவராக விளங்கியவர். பலருக்கு சினிமாவில் நடக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவர். சினிமாவில் பலருக்கு உதவியிருக்கிறார் அவர் ரொம்ப நல்லவர் என்று சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கூறிவந்திருப்பதை பார்த்திருக்கிறோம். அதேபோல் எந்த வித விளம்பரமும் இல்லாமல் மருத்துவமனைகள், கல்விநிலையங்களுக்கு உபகரணங்கள் வாங்கி கொடுப்பது என பல்வேறு உதவிகளை செய்து வந்திருக்கிறார். 

தேமுதிக என்கிற கட்சியை துவங்கி அரசியலுக்குள் நுழைந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவராக அவர் விளங்கினார் என்பது தமிழக மக்கள் அறிந்ததுதான். துணிச்சலுடன் தேசியவாதத்தை,மும்மொழிக் கொள்கையை  ஆதரித்து அரசியல் செய்தவர் விஜயகாந்த். அதனால் அவருக்கு அமோக ஆதரவு இருந்தது. ஆனால் அவருடைய போதாத காலமோ என்னவோ? அவர் உடல்நிலை பாதிக்கபட்டு முடங்கினார். அத்துடன் அவரது கட்சியும் குறிப்பிட்ட நிலையில் மட்டுமே பயணிக்கும் நிலை ஏற்பட்டது. 

சமீபகாலமாக அவருடைய உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்தவர் வீடு, ஆஸ்பத்திரியுமாக இருந்தார். இன்று(28.12.2023)காலை அவருக்கு கொரோனா இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 

அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, விஜயகாந்த் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று இரங்கல் தெரிவித்தார். தற்போது தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லபடுகிறது. பல்வேறு தலைவர்கள், சினிமாதுறையை சேர்ந்தவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.