தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

election news

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்களவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான பிரசாரம் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பிரதமர் மோடி சுமார் 8 தடவை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டார். இந்தியா கூட்டணிக்காக ராகுல்காந்தியும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டார். 

அதிமுக, திமுக, பாஜக,நாம் தமிழர் கட்சி என தமிழக அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இன்று (17ம் தேதி) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் செய்வதற்கான காலம் முடிந்துவிட்டது. நாளை மறுநாள் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதுக்கிடையில் சமூக வலைதளங்கள் உள்பட எந்த ஒரு ஊடகங்கள் மூலமும் எந்த வித பிரசாரங்களும் நடத்த கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.