தூத்துக்குடி பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம் - விமர்சையாக கொண்டாட்டம்

Bjp news

தூத்துக்குடி பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம் - விமர்சையாக கொண்டாட்டம்

முன்னாள் பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த தினமான இன்று (25.12.2025), நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் விமர்சனையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வாஜ்பாயின் பிறந்த தினம், நல்லாட்சி தினம் (Good Governance Day) ஆகவும் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் உரையாற்றுகையில், “1980ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை நிறுவிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடங்கி வைத்த அந்த இயக்கம், இன்று இந்தியாவின் 19 மாநிலங்களில் ஆட்சி நடத்தும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முதன் முதலில் வலுவான அடித்தளத்தை அமைத்தவர் வாஜ்பாயே” எனக் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் தேன்மொழி, சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், கிழக்கு மண்டல் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் அனுஷ்யா ஆகியோர் உரையாற்றினர்.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம், பொருளாதார சீர்திருத்தங்கள், இந்தியாவின் உலகளாவிய மதிப்பை உயர்த்திய வெளியுறவு கொள்கை உள்ளிட்டவை குறித்து அவர்கள் விரிவாக பேசினர்.

தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் மட்டுமல்லாமல், கிழக்கு மண்டல் சார்பாக கீழரத வீதி பகுதியிலும், தெற்கு மண்டல் சார்பாக முனியசாமிபுரத்திலும், மேற்கு மண்டல் சார்பாக சண்முகபுரத்திலும், வடக்கு மண்டல் சார்பாக சில்வர் புரத்திலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

மேலும், மகளிர் அணி சார்பில் மாவட்ட துணை தலைவர் செல்வி ஏற்பாட்டில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திருவுருவப் படத்திற்கு முன்பு 108 விளக்குகள் ஏற்றி அவரது பிறந்த தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாஜ்பாயின் தேசப்பற்றையும் நல்லாட்சி சிந்தனைகளையும் நினைவுகூர்ந்தனர்.