நாம் இந்தியர் கட்சி சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Dinathanthi

நாம் இந்தியர் கட்சி சார்பில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு நாளை முன்னிட்டு நாம் இந்தியர் கட்சி சார்பில் திருச்செந்தூரில் உள்ள சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.   

இந்நிகழ்ச்சிக்கு நாம் இந்தியர் கட்சியின் மாநில பொருளாளர் பேரூரணி து. ஜெயகணேஷ் தலைமை வகித்தார். கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மாவட்ட துணை செயலாளர் சின்னத்துரை, இளைஞர் அணி செயலாளர் உடையார், நல்லாசிரியர் பன்னீர்செல்வம் ,ராஜன், பேச்சிமுத்து, ஜெயக்குமார்,எட்பின் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.