சபையில் மதம் சம்பந்தபட்ட போட்டோவை காட்டி அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய ராகுல்?
Parliment News
இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்களில் பெரும்பாலானோர் நாடாளுமன்றத்தில் எம்.பியாக பொறுப்பேற்ற போது கையில் அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு பொறுப்பேற்றனர். அந்த அளவிற்கு அவர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை ஆதரிப்பவர்களாக சபையில் காட்டினர். அந்த அணியை சேர்ந்தவர்களும் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதில் அக்கறை இருப்பதாக கூறிவருகின்றனர். இதுவரை 10 வருடங்கள் இருந்த, தற்போதும் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவினர் அரசியல் அமைப்பை மதிக்கவில்லை அல்லது அவர்கள் அரசியல் அமைப்பை மதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துவதாக இதை பார்க்க முடிகிறது.
ஆனால் இன்று, அந்த அரசியல் அமைப்பு சட்டம் வலியுறுத்தும் மதம் சார்ந்த எந்த அடையாளங்களையும் சபையில் தூக்கிபிடிக்க கூடாது என்கிற விதியை மீறி, எதிர்கட்சித்தலைவரான ராகுல்காந்தி, மதங்களை சேர்ந்த புகைப்படத்தை சபையில் உயர்த்தி பிடித்து பேசினார். இந்த செயல் குறித்து அமைச்சர்கள், சபாநாயகர் சுட்டிக்காட்டிய பிறகும் அப்படி செய்வதை நிறுத்தவில்லை. இது அரசியல்வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நியாயம் கேட்பவர் முதலில் நியாயமாக நடந்து கொண்டு நியாயம் கேட்க வேண்டும். சுட்டி காட்டிய பிறகும் அதே தவறை செய்வது அறியாமையா அல்லது வேண்டுமென்றே அத்துமீறுகிறாரா என்று பொதுமக்கள் விவாதித்து வருகின்றனர்.