கல்விக்கு அதிபதி சரஸ்வதி - இன்று சரஸ்வதி பூஜை
Saraswathi Poojai
இன்று சரஸ்வதி பூஜை
கண்கள் வழியாக நாம் உலகத்தை காண்கிறோம். கண் இல்லை என்றால் வாழ்வு ஸ்தம்பித்து விடும். ஆனால் கண்களை விட முக்கியமானது ஒன்று உள்ளது.அதுதான் கல்வி, ’கற்றதை பின் பற்றுனவரே கண்களைக் கொண்டவர். அதை பின்பற்றாதவர்கள் முகத்தில் புண்களைக் கொண்டவர்கள் முகத்தில் புண்களைக் கொண்டவர்கள்’ என்கிறார் திருவள்ளுவர். எமதர்மன் ஒருமுறை பாண்டவர்களில் மூத்தவரான தர்மரிடம், ’’மனிதனுக்கு விலை மதிப்பற்ற சொத்து எது?’’
கல்விக்கு அதிபதி சரஸ்வதி.அவளுக்குரிய நாளான சரஸ்வதி பூஜையன்று வழிபடுகிறோம். கல்வி, கலை, கலாசாரம், விஞ்ஞானம், மெய்ஞானம் என அனைத்திற்கும் அவளே அதிபதி. எனவே கல்வி தொடர்பான பொருட்களான பேனா, பென்சில், புத்தகத்தை பூஜையில் வைத்து வழிபடுவது நல்லது. அதே போல் தொழிலாளர்களும் தொழில் கருவிகளை சுத்தம் செய்து பூஜை செய்கின்றனர். இதன் மூலம் தொழிலில் லாபம் பெருகும். இதனால் சரஸ்வதி பூஜையை ஆயுத பூஜை என்று அழைக்கிறோம்.
வெண் தாமடையில் அமர்ந்து கல்வி வரம் அருளும் கூத்தனூர் சரஸ்வதி
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே கூத்தனூரில் கல்விக்கு தெய்வமான சரஸ்வதி தேவிக்கு தனிக்கோவில் உள்ளது. இங்குள்ள அம்பிகை, கல்வி ஞானத்திற்கு உரிய தெய்வமாக போற்றப்படுவதோடு, மூலவராக சரஸ்வதி தேவியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
வெண்ணிற ஆடை, வெந்தாமரையில் பத்மாசனம், வலது கீழ் கையில் சின் முத்திரை, இடக்கையில் புத்தகம், வலது மேல் கையில் அட்சர மாலை, இடது மேல்கையில் அமிர்தகலசம் தாங்கி அம்பிகை அமர்த்த கோலத்தில் காட்சியளிக்கிறார். தென்னிந்தியாவிலேயே சரஸ்வதிக்காக அமைய பெற்றுள்ள ஒரே கோயில் இதுதான். கூத்தனூர், கவிஞர் ஒட்டக்கூத்தர் பிறந்த ஊராகும். கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை வழிபட நினைத்த ஒட்டக் கூத்தர், பூந்தோட்டம் அமைத்தூ தட்சிணாவாகினி மாநதியின் நீரால் அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் வேண்டுதல் பலித்தது. நாமகள் தன்வாய் மணக்கும் தாம்பூலத்தை கூத்தருக்கு தந்து வரகவி ஆக்கினாள் என்பது ஐதீகம்.
இரண்டு ராஜராஜ சோழன் அரசவையில் இருந்த ஒட்டக்கூத்தருக்கு இந்த கிராமத்தை அரசர் பரிசாக அளித்துள்ளார். அதனாலேயே இந்த கிராமம் கூத்தன் ஊர் என்று அழைக்கப்படுகிறதாம். கல்விக்கு தெய்வமான சரஸ்வதி அம்மை இங்கு மூலவராக எழுந்தருளியுள்ளதால் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு முன்பு வந்து சரஸ்வதுஇ தேவியை வழிபட்டு செல்கின்றனர். ஆரம்பக்கல்வி கற்கவேண்டிய சிறார்களை சரஸ்வதி பூஜை தினத்தன்று பெற்றோர்கள் இக்கோவிலுக்கு அழைத்து வந்து நெல்லில் அ எழுதவைக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வருகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி கலக்கும் இத்தலம் தட்சிணதிரிவேணி சங்கமம் எனப் பெயர் பெற்ற இக்கோயிலில், சரஸ்வதி பூஜை விழா நாளில் அறிவும் ஞானமும் வேண்டி வரும் பக்தர்கள் இங்குள்ள அம்பிகையை மனதார வழிபட்டு மகிழ்வோடு திரும்புகின்றனர்.
nadunilai.com