குலசையில் விதியை மீறி டாஸ்மாக் கடை திறக்க முயற்சி.! - தடுத்து நிறுத்தியது பாஜக.!!

Bjp news

குலசையில் விதியை மீறி டாஸ்மாக் கடை திறக்க முயற்சி.! - தடுத்து நிறுத்தியது பாஜக.!!

இந்திய அளவில் தசரா பண்டிகை கொண்டாடுவதில் முக்கிய இடத்தில் இருக்கிறது குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயில். காப்பு கட்டுதல், விரதம் இருந்தல்,பல்வேறு வேடமணிந்து வீதி உலா வருதல் என்று படிப்படியாக ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடைபெற்று இறுதியில் மகிஷாசூரன் வதம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அம்மன் வீதி உலா, அதன் பிறகு காப்பை கழற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையே 9,10,11 ஆகிய கால கட்டத்தில் குலசேகரப்பட்டினத்தில் மது விற்பனை கூடாது என்று ஏற்கனவே விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரப்பட்டணம் ஊரில் டாஸ்மார்க் கடையானது வழக்கம் போல் 9 10 11 ஆகிய திருவிழா காலங்களில் திறப்பது இல்லை. ஆனால் இந்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதற்கிடையே விதியை மீறி டாஸ்மார்க் கடையை  திறக்கும் முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சித்ராங்கதன் உத்தரவின் பேரில் பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் வெண்ணிமலை தலைமையில், பல்வேறு பாஜக நிர்வாகிகள் திரண்டு சென்று டாஸ்மாக் கடையை திறப்பதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். 

எனவே வேறு வழியில்லாமல் டாஸ்மாக் கடையை திறக்கும் முயற்சி கைவிடப்பட்டது. தற்போது டாஸ்மாக் கடைகள்  அடைக்கபட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பல்வேறு பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.