வெவ்வேறு திசை அதிமுக வேட்பாளர்களை ஒன்று சேர்த்த அம்பேத்கர்

Admk

வெவ்வேறு திசை அதிமுக வேட்பாளர்களை ஒன்று சேர்த்த அம்பேத்கர்

தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் முக்கிய விஐபிக்களாகும். தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்.பி.சண்முகநாதனும், தூத்துக்குடி மாநகர செயலாளராக சி.த.செல்லப்பாண்டியனும் கட்சி பொறுப்பில் இருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் இருவரும் பெரிய அளவில் ஒட்டிக் கொள்வதில்லை. தனக்கென்று ஒரு கூட்டம், தனக்கென்று ஒரு எல்லை என்று நகர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதனுக்கும், தூத்துக்குடி தொகுதியில் சி.த.செல்லப்பாண்டியனுக்கும் தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு கொடுத்தது. எதிரும், புதிருமாக இருந்த இவர்களை கூட்டணி கட்சியான பாஜக கூட்டத்திற்கு அழைத்து சேர்த்து வைத்தது. அதன் பிறகு மாவட்ட செயலாளரான எஸ்.பி.சண்முகநாதன் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டார். தூத்துக்குடி எல்லை சம்பந்தபட்டவர்கள் சி.த.செல்லப்பாண்டினை ஆதரிக்க வேண்டும். அவர் வெற்றிக்காக தேர்தல் வேலை பார்க்க வேண்டும் என்றார். அதனால் சி.த.செல்லப்பாண்டியன் ஆதரவாளர்களுடன் எஸ்.பி.எஸ் ஆதரவாளர்களும் இணைந்து தேர்தல் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் சில நேரங்களில் அவர்களுக்குள் மன சோர்வு வந்து போவதாக அதிமுகவில் சிலர் புலம்பி வந்ததை பார்க்க முடிந்தது.   

இந்தநிலையில் இன்று டாக்டர் அம்பேத்கரின் 136வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மற்றும் அதிமுக வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாநகர செயலாளருமான சி.த செல்லபாண்டியன் ஆகியோர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் ஆறுமுகநயினார், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச்செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ் ,மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர், பகுதி கழகச் செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சந்தனப்பட்டு, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் பொன்மலர் மனுவேல் ராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், இணைச் செயலாளர்கள் ஆண்ருமணி, பிள்ளை விநாயகம்,சரவணபெருமாள், முனியசாமி,மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் கல்வி குமார்,இணைச் செயலாளர் லட்சுமணன்,பகுதி துணைச்செயலாளர் கணேசன், வர்த்தக அணி பொருளாளர் சுகுமார், வட்டசெயலாளர்கள் அருண் ராஜா, ஜனார்த்தனன், உதயசூரியன், சொக்கலிங்கம், மணி கணேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் ராஜேஸ்வரி இந்திரா ,ஸ்மைலா,ஷாலினி,அகிலா, மற்றும் வசந்த், தங்கமாரியப்பன் , சேவியர் ராஜ், முத்துக்குமார், பாலஜெயம் சாம்ராஜ், சகாயராஜ், உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.