மன கசப்பில் இருந்த தூய்மைப்பணியாளர்கள் - கூலாக்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

மன கசப்பில் இருந்த தூய்மைப்பணியாளர்கள் - கூலாக்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

மன கசப்பில் இருந்த தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு, சாப்பாடு போட்டு கூலாக்கினார் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி. 

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள், வேலை உத்தரவாதம் மற்றும் தீபாவளி போனஸ் கேட்டு போராட்டங்களை நடத்தி வந்தனர். பெரும்பாலும் தனியார் ஒப்பந்தகாரர்களின் மூலமே தூய்மை பணி மேற்கொள்ளப்படுவதால் மாநகராட்சி நிர்வாகங்கள் இவர்களின் கோரிக்கையை நேரடியாக தீர்த்து வைக்கமுடியாமல் திணறின. சென்னை போன்ற பெருநகரில் வேலை உத்தரவாதம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராடினர். தூத்துக்குடி போன்ற நகரில் அக்கோரிக்கையுடன் தீபாவளி போனஸ் கேட்டு போராட்டம் நடத்தினர். பணியாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வரை வேலை முன்பணம் தயாராக இருந்தார்கள் ஒப்பந்தகாரர்கள். ஆனால் முழுவதும் போனஸாக வேண்டும் என பிடிவாதம் பிடித்தார்கள் பணியாளர்கள். மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு தீர்க்க முடியாமல் போராட்டம் நீடித்தது. களமிறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி, பாதிக்கு பாதி என்கிற அடிப்படையில் பேசி முடித்தார். அத்துடன் அனைத்து தூய்மைபணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களையும் மண்டலம் வாரியாக வரவழைத்து அவர்களுக்கு மட்டன், சிக்கன் என தடபுடலாக உணவு வழங்கினார். அத்துடன் அனைவருக்கும் புத்தாடைகள், இனிப்புகளை கை நிறைய கொடுத்து ஒப்பந்தகாரர்களிடம் பேசிய தொகையையும் கொடுக்க செய்தார்.         

அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி பகுதியில் எல்லோரும் சுகாதாரமான முறையில் வாழ வேண்டும், என்பதற்காக பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் பங்கு போற்றதக்கது. காரணம் கடந்த மழைவெள்ள காலத்தின் போது தேவையற்ற கழிவு பொருட்களை அகற்றியது மட்டுமின்றி பல உயிரிழப்பு ஏற்பட்டபோது அந்த இடத்திலும் நின்று பல்வேறு பணிகளை இந்த மாநகராட்சி பகுதி மக்கள் நலன் கருதி பணியாற்றியதை எண்ணி மகிழ்கிறேன். இனி வரும் காலங்களிலும் தன்நலம் கருதாமல் பொது நலத்தோடு பணியாற்றும் உங்கள் வாழ்வு எல்லா வகையிலும் சிறக்க மனதார வாழ்த்துகிறேன் என்றார். பணியாளர்கள் மனநிறைவோடு சென்றனர். 

அப்போது திமுக வட்ட செயலாளர் தெய்வேந்திரன், இளைஞரணி வேல்முருகன், டிடிசி முத்துராஜ், கேடிசிபால்ராஜ், செல்வராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகரன், அவைத் தலைவர் ராஜசேகர், சுரேஷ் மக்புல் பாட்ஷா, நயினார், சுடலை, டி. பாலு, ஜவகர், ராஜாமணி, அண்ணாதுரை, சங்கர நயினார், சங்கர சுப்பிரமணியன், கே.டி.சி. சண்முகவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவர்கள் பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.