சாத்தான்குளம், உடன்குடி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நிதி வேண்டும் - ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ மனு

Uoorvasi Amirtharaj

சாத்தான்குளம், உடன்குடி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நிதி  வேண்டும் - ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ மனு

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவரது  தொகுதிக்கு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு மூலமாக முதல்வருக்கு மனு அளித்துள்ளார். 

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது. கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் சாத்தான்குளம், உடன்குடி புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.390 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.  ஆனால் இன்று வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. எனவே நிதி ஒதுக்கீடு  செய்து கூட்டு குடிநீர் திட்ட பணியினை இந்த ஆண்டே துவங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் .மேலும் பெரியதாழை கிராமத்தை தனி கிராமமாக அறிவிக்க வேண்டும்.  வெள்ளகாலத்தில் அப்பன்கோவில், சிவராமமங்கலம், மங்கலகுறிச்சி, வரதராஜபுரம் மற்றும் கஸ்பா ஆகிய கிராமங்கள் தனி தீவுகளாக  மாறின. இதைப் போக்க  தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூ.32 கோடியில்  இரட்டை திருப்பதி  டூ  அப்பன் கோவில் பாலம் கட்டவும், கடையனோடை குறுகிய காலத்தை அகற்றிவிட்டு  மதகுகளுடன் கூடிய அகலமான புதிய பாலம் கட்டவும், சாத்தான்குளம் கோமாநேரி கருமேனியாற்தின் குறுக்கே  முற்றிலும் சேதமடைந்த தரைமட்ட காலத்தை உயர் மட்ட பாலமாக கட்டவும், வெள்ளத்தில் சேதம் அடைந்த பத்மநாபமங்கலம் பாலத்திற்கு புதிய பாலம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து இந்த ஆண்டிலேயே பணிகள் துவக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தொகுதிக்கு தேவையான பணிகளை செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் உடனடியாக கோரிக்கைகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.