தீய சக்தியான திமுகவை வீழ்த்துவதே மக்களுக்கு செய்யும் நல்ல காரியமாகும் - ஏரலில் எஸ்.பி.சண்முகநாதன் பேச்சு

Admk

தீய சக்தியான திமுகவை வீழ்த்துவதே மக்களுக்கு செய்யும் நல்ல காரியமாகும் - ஏரலில் எஸ்.பி.சண்முகநாதன் பேச்சு

தமிழக சட்ட மன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிட உள்ளார். அதனால் தேர்தல் பணிகளில் ஒன்றான செயல்வீரர்கள் கூட்டம் ஏரலில் உள்ள ஜேஜே மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மண்டபம் நிரம்பி, வெளியிலும் ஏராளமானோர் கூடியிருந்தனர். இதுபோன்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் சார்பில் ஒன்று அல்லது இரண்டுபேர்கள் மட்டும் பேசுவர். இறுதியில் முக்கிய பொறுப்பாளர், வேட்பாளர் பேசுவர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிமுகவில் பலரும் பேசினர். அதுபோல் பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலரும் பேசினர். இறுதியாக மாவட்ட செயலாளரும், வேட்பாளருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசினார். அவர் பேசும்போது,

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சி, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி சொந்தம் கொண்டாடும் ஆட்சியாக உள்ளது. கருணாநிதியின் பெயரை உயர்த்தி பிடிப்பதற்காக நல்ல தலைவர் என்று பெயர் எடுத்துள்ள காமராஜர் பெயரை கெடுக்கும் செயலில் திமுக செயல்படுகிறது. திமுக ஆட்சியில் சொந்தமாக எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை. தேர்தலுக்கு முன்பாக அறிவித்த ரூ.1000 வை கூட அதிமுக போராட்டம் நடத்திய பிறகுதான் 3 ஆண்டுக்கு பிறகு வழங்கினர். உலக அளவில் இந்தியாவிற்கு மோடி நல்ல பெயரை உருவாக்கி வைத்துள்ளார். நாடுமுழுவதும் மத்தியரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் திமுக அரசு அதை தடுக்கும் வகையில் செயல்படுகிறது. அதனால் மக்கள் முழுபயனையும் அடையமுடியவில்லை. எனவே தீய சக்தியாக உள்ள திமுகவை முற்றிலும் அகற்றினால்தான் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய முடியும். திமுகவை அகற்றுவதற்காகவே எடப்பாடியார் பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. தீய சக்தியான திமுகவை வீழ்த்துவதே மக்களுக்கு நாம் செய்யும் நல்ல காரியமாகும். தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க மக்கள் தயாராக உள்ளனர் என்றார்.