தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் நவம்பர் 12, 13 நடைபெறுகிறது.!
CSI Diocese
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என திருமண்டல நிர்வாகியும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகியான ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி, திருமண்டல தேர்தல் தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்திற்கான லே செயலர், பொருளாளர், உப தலைவர், குருத்துவ செயலர் ஆகியோருக்கான தேர்தலை நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான முழு அட்டவணையும் வரும் 27ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் பணிகள் ஜூலை 6 முதல் தொடங்கும் என்றும் அதில் கூறியுள்ளார்.
மேலும் தேர்தலை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ரத்தினராஜ், ஜான் ஆர்.டி.சந்தோஷம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
nadunilai.com