பொங்கல் பண்டிகை முடிந்த பின் சென்னை–தூத்துக்குடி இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

Train News

பொங்கல் பண்டிகை முடிந்த பின் சென்னை–தூத்துக்குடி இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

பொங்கல் பண்டிகை முடிந்த பின் சென்னை–தூத்துக்குடி இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தின் செயலாளர் மா. பிரமநாயகம் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் மனுவாக அளித்துள்ளார்.

அந்த மனுவில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை–தூத்துக்குடி, தூத்துக்குடி–சென்னை மற்றும் மைசூர்–தூத்துக்குடி, தூத்துக்குடி–மைசூர் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கிய தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் சூழலில், 17, 18, 19 ஆகிய தேதிகளில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிக அளவில் இருக்கிறது. குறிப்பாக, இந்நாட்களில் தூத்துக்குடி–சென்னை இடையே பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். 

தற்போது, 19-01-2026 அன்று சென்னை சென்ட்ரல்–தூத்துக்குடி மற்றும் 20-01-2026 அன்று தூத்துக்குடி–சென்னை சென்ட்ரல் ஆகிய தினங்களில் மட்டுமே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது போதுமானதாக இல்லை. இதனை கருத்தில் கொண்டு, பொங்கல் பண்டிகை முடிந்த உடனடியாக சென்னை–தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி–சென்னை இடையே கூடுதலாக இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.  மேலும், சிறப்பு ரயில்கள் இயக்க இயலாத சூழலில், தூத்துக்குடி–சென்னை இடையே சாதாரண பொதுப் பெட்டிகள் கொண்ட ரயில்களை, குறிப்பாக சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என .கூறப்பட்டுள்ளது.