தூத்துக்குடியில் வாய் திறக்காத விஜய் - ஏன், எதற்காக ?
Tvk News
தவெக தலைவர் விஜய் வீட்டைவிட்டு பொதுக்கூட்டத்திற்கோ, தேர்தல் பிரசாரத்திற்கோ கிளம்பிவிட்டார் என்றால், என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்படுவதை பார்க்க முடிகிறது.
விஜய் வீட்டின் கதவு திறப்பதில் இருந்து அவர் கார் வரும் வழியெல்லாம் தொலைக்காட்சிகள் லைவ் ஒளிபரப்பு செய்வதை பார்க்கிறோம். கட்டுக் கடங்காத கூட்டம் கூடுவதையும், அந்த கூட்டத்தில் அவர் கெத்தாக பேசுவதையும் பார்க்கிறோம். அப்படித்தான் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இன்றும் அப்படித்தான் கிளம்பினார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமானநிலையத்திற்கு வந்த விஜய், முதலில் கார் மூலம் திருநெல்வேலிக்கு சென்றார். மதியம் வரை அங்கு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டார். ஆவேசமாகவும், உருக்கமாகவும், கலகலப்பாகவும் அங்கு விஜய் பேசிய பேச்சு அனைவர் நெஞ்சத்திலும் பதியும் அளவில் இருந்தது. மாலையில் அதேபோல் தூத்துக்குடியிலும் பேசுவார் என்று எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது. அவர் வருகைக்காக தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். பல மணிநேரம் அங்கு காத்து நின்ற தவெக, நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆடிப்பாடி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
மாலையில் கூட்டத்திற்குள் புகுந்த விஜயின் பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து சென்றது. அப்படித்தான் செல்ல முடியும் அந்த அளவிற்கு தொண்டர்கள், ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். வாகனத்தில் இருந்து விஜய் கையை அசைத்து ஆதரவாளர்களின் மகிழ்ச்சிக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்தார். மெதுவாக ஊர்ந்து சென்ற வாகனம் எதாவது ஒரு இடத்தில் நிற்கும். அந்த இடத்தில் நின்று விஜய் பேசுவார் என்று கூட்டத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் விஜயின் வாகனம் மெதுவாக நகர்ந்து கொண்டே விவிடி சிக்னல் பகுதிக்கு வந்து அங்கிருந்து வலது புறமாக திரும்பி சென்று வாகைகுளம் விமானநிலையத்திற்கு சென்றுவிட்டது. அங்கிருந்து விமானம் மூலம் விஜய் சென்னைக்கு சென்றுவிட்டார்.
பேசாமல் கையை மட்டும் அசைத்து காட்டி விட்டதற்கான காரணம் தெரியாமல் தொண்டர்கள் திண்டாடிடனர். வழக்கமாக அவர் வரும்போது இசைக்கும் இசையின் சப்தம் கூட கேட்கவில்லையே என்று கேள்வி கேட்டபடி நின்றனர். அக்கூட்டதில் சிலர், விஜய் கூட்டத்தில் பேசினால் தொண்டர்களின் ஆர்ப்பரிப்பு அதிகமாக இருக்கும். அப்போது அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாது. அதனால் அனுமதி கொடுக்கும் போதே சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. வெறும் 15 நிமிடம் மட்டும் பேசிக் கொள்ள அனுமதி வழங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் கடைசியாக என்ன நடந்ததோ தெரியவில்லை. விஜய் பேசாமலே சென்றுவிட்டார் என்றனர். உண்மையில் விஜய் பேசினால் அவரது தொண்டர்கள் ஆர்ப்பரிப்பார்கள். அந்த அளவிற்கு அவர்கள் எழுச்சியுடன்தான் இருந்தனர்.
அதற்காக ஒரு கட்சியின் தலைவர் பிரசாரத்தில் பேசக் கூட முடியாத ஒரு சூழ்நிலை இருக்குமா? அதற்கு தொண்டர்கள் பொறுப்பா?. சட்ட ஒழுங்கை கவனிக்கும் காவல்துறை அதிகாரிகள் பொறுப்பா?.
nadunilai.com