புதுக்கோட்டை சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே அசுத்த நீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

Pudukottai News

புதுக்கோட்டை சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே அசுத்த நீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் பூமியில் இருந்து வெளியாகும் தண்ணீர் ரோட்டில் தேங்குவதால் சாக்கடை நீராக காட்சியளிக்கிறது. பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியாகுகிறதா? அருகில் உள்ள கடைகளில் இருந்து கழிவு நீர் வெளியாகுகிறதா என்று தெரியவில்லை. குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான பைப் லைனில் இருந்து தண்ணீர் வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். ரோட்டில் தேங்கும் அசுத்த நீரில் மிதித்துதான் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டியதுள்ளது. இதனால் நோய் பரவும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.  தூத்துக்குடி, திருநெல்வேலி, ஏரல், ஸ்ரீவைகுண்டம் வழித்தடத்தில் உள்ள புதுக்கோட்டைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதனால் இப்பஸ் ஸ்டாப் பெரும்பாலான நேரங்களில் கூட்டமாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது இந்த அசுத்த நீர் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இது குறித்து அப்பகுதியினர் குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே தேங்கும் தண்ணீரால் நோய் பரவும் ஆபத்து வருவதற்கு முன் குறிப்பிட்ட அந்த இடத்தில் ஏற்பட்டுள்ள பைப் லை உடைப்பை சரி செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.