தூத்துக்குடியில் பயணிகள் நிழல் கூடங்கள் – கீதாஜீவன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

0
148
geethajeevan

தூத்துக்குடி நவ : 10

தூத்துக்குடியில் எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட இரண்டு பயணிகள் நிழல் கூடங்களை கீதாஜீவன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகிலும், நீதிமன்றம் அருகிலும் தலா ரூ.15 லட்சம் மதிப்பில் இரண்டு பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. இதனை கீதாஜீவன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி பாலன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், வட்டச்செயலாளர் சுரேஷ், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here