தேர்க்கன்குளத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி போனஸ்

0
24
bonus

சாத்தான்குளம், நவ. 12:

சாத்தான்குளம் அருகே தேர்க்கன்குளம் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி போனஸ் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ராமானுஜம்புதூர் பால் கூட்டுறவு சங்க தலைவர் செங்கான் தலைமை வகித்து பொருள்கள் வழங்கினார். சங்க செயலர் ரெங்க நாதன் வரவேற்றார். இதில் மாவட்ட அதிமுக இளைஞர் அணி செயலர் விஜய உடையார், மாவட்ட இளைஞர் அணி துணை செயலர் கள்ளண்டன், தேர்க்கன்குளம் ஆவின் பால் உற்ப்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், துணை தலைவர் இசக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here