தூத்துக்குடி டூவிபுரம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

0
73
school news

தூத்துக்குடி, நவ.17:

தூத்துக்குடி டூவிபுரம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி டூவிபுரத்திலுள்ள டி.என்.டி.டி.ஏ., நடுநிலைபள்ளியில் கடந்த 2004 – 2005ம் கல்வியாண்டில் பயின்ற பழைய மாணவ, மாணவியர்களின் சந்திப்பு விழா தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவிற்கு, நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியை பொன்பாய் குணசீலி தலைமை வகித்தார்.

பள்ளி தாளாளர் குருவானவர் ஆனந்த் சாமுவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பழைய மாணவ, மாணவியர்களை வாழ்த்தினார்.

சந்திப்பில் பழைய மாணவ, மாணவியர்கள் தங்களது குடும்பத்தினரோடு கலந்துகொண்டு, கடந்த 15வருடத்திற்கு முந்தைய தங்களின் பள்ளி மற்றும் கல்லூரி கால நினைவுகள் குறித்து கலந்துரையாடி மகிழ்ந்தனர். அதனைத்தொடர்ந்து வருடம்தோறும் இந்த சந்திப்பு விழாவினை நடத்துவது என்று தீர்மானித்து உறுதி ஏற்றனர்.

இதில், பள்ளியின் முன்னாள் ஆசிரியைகள் ஞானம், ரோஸ்லின் அகிலா, அனிதா ஸ்டெல்லா, ஹெப்சிபா மற்றும் ஆசிரியைகள் குணசீலி, அமுதவள்ளி உட்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மணிகண்டன், பாக்கியராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here