தூத்துக்குடி நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரை தீயணைப்புத்துறையினர் அகற்றினர்.
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் கடந்த வாரத்தில் மழை பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாநகரில் நீதிபதிகள் குடியிருப்பு, பிரையன்ட் நகர், ஸ்டேட் பாங்க் காலனி, 3வது மைல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் குளம் போல தேங்கி கிடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார் உத்தரவின்பேரில் நீதிபதிகள் குடியிருப்பு, பிரையன்ட் நகர், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை தீயணைப்பு படையினர் ராட்சத மோட்டார்கள் மூலமாக அகற்றி வருகின்றனர்.
தூத்துக்குடி நிலைய அலுவலர் சங்கரன் தலைமையில் லெனின் ரவிச்சந்திரன், மணிகண்டன், மகேஷ், சதீஷ், காளிராஜா உள்ளிட்ட தீயணைப்புபடை வீரரர்கள் மாநகர் பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை ராட்ச மோட்டார்கள் மூலமாக அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.