இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் நாசரேத் நகர திமுகவினர் கொண்டாட்டம்!

0
120
Capture

நாசரேத்,ஜூலை. 06: திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதி
ஸ்டாலின் நியமிக்கப்பட்டு உள்ளார். இதை வரவேற்று நாச ரேத் நகர திமுக வினர்
பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தூத்துக்குடி தெற்கு
மாவட்ட பொறுப்பாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன்
ஆலோசனை யின்பேரில் நாசரேத் பேருந்து நிலையம் அருகே நடந்த இந்நிகழ்ச்சிக்கு
நாசரேத் நகர திமுக செயலாளர் ஆர்.ரவி செல்வக்குமார் தலைமை வகித்தார். நாசரேத்
நகர இளைஞரணி அமைப்பாளர்கள் என்.ஆல்வின், பா.பார்த்தீபன், அகஸ்டின் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய
திமுக செயலா ளர் வி.நவீன்குமார்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலா ளர்
ஜனகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.திமுக மாவட்ட பிரதிநிதிகள் அலெக்ஸ்
புருட்டோ, அன்பு தங்கபாண்டியன், முருகதுரை, சாமுவேல் மாவட்ட தகவல் தொடர்பு
ஒருங்கிணைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்
தம்பு என்ற அருண் சாமு வேல்,நகர அவைதலைவர் ஜெ.அருள்ராஜ், ஒன்றிய பிரதிநிதிகள்
காந்தி, ஜேம்ஸ், தாமரைசெல்வன், நகர தொண்டரணி அமைப்பாளர் ஞானராஜ்,
உடையார்,கருத்தையா,இராஜேந்திரன், ராபின், பால்ராஜ்,திருமணி, பிரதீப், ஆட்டோ
ராஜ், பீஷ்மா, ஜெகன், சாமுவேல், அலெக்சாண்டர், ஜெயசிங்,விஜயகுமார் உள்ளிட்ட
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு
இனிப்புகள் வழங்கப்பட்டது.
படவிளக்கம்:Nazareth News Page 3 Photo 1 (06.07.2019) திமுகவின் மாநில
இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு உள் ளார். இதை
வரவேற்று நாசரேத் நகர திமுகவினர் நாசரேத் பேரூந்து நிலையம் அருகில் பட்டாசு
வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here