நாசரேத் பேரூராட்சிப் பகுதியில் தார் சாலைகளை செப்பனிட வேண்டும்! – ஏ.ஐ.டி.யூ.சி கோரிக்கை!!

0
82
nazareth news

நாசரேத்,நவ.21:நாசரேத் பேரூ ராட்சிப் பகுதியில் தார் சாலை களை செப்பனிட வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஏ.ஐ.டி.யூ.சி.மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ் கோரிக்கை கோரிக்கை விடுத் துள்ளார்.

இதுகுறித்து ஏ.ஐ.டி.யூ.சி.மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ண ராஜ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சிய ருக்கு விடுத்துள்ள கோரிக்கை யில் கூறியிருப்பதாவது:- நாசரேத் , பேரூராட்சிப் பகுதியில் நெடுஞ் சாலைத்துறை சாலை அமைத்து 11 வருடங்களுக்குமேல் ஆகிறது. இதனால் நாசரேத் ரயில் நிலை யம் எதிரில், கே.வி.கே.சாமி சிலை அருகில், என்.டி.என்.தெரு முனை,பிரகாசபுரம் கூட்டுறவு நகர வங்கி முன்பு மற்றும் பிரகாச புரம் பேருந்து நிறுத்தம் முன்பு, போக்குவரத்தத்திற்கு உகந்ததாக இல்லாமல் உள்ளது.

மேலும், நெடுஞ்சாலைத்துறை தரமற்ற சாலை அமைத்ததால், ஒய்யான் குடி,கச்சனாவிளை,துரைசாமிபு ரம்,நெய்விளை,இடையன்விளை ஆகிய பகுதிகளில் மிகவும் மோச மாக சேதமடைந்துள்ளது, மேலும் நெய்விளை முதல் தோிரோடு வரை வனத்துறை பகுதியில் உள்ள, ரோடு முழுமையாக சேத மடைந்துள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.இந்த பணியை விரைந்து செய்திடவேண்டும் என நாசரேத் முதல் இடையன்விளை பகுதி பொதுமக்கள் விரும்புகின் றனர்.இவ்வாறு அந்த கோரிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here