உதயநிதிஸ்டாலின் கைதை கண்டித்து திருச்செந்தூரில் அனிதாராதாகிஷ்ணன் தலைமையில் திமுகவினர் மறியல்

0
126
anitharadhakrishnan

திமுக இளைஞரணி தலைவர் உதய நிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்செந்தூரில் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக அனைத்து அரசியல்கட்சிகளும் வேலையை தொடங்கிவிட்டன. அந்த வகையில் திமுகவும் அதன் வேலையை தொடங்கியிருக்கிறது. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக சென்று தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். அந்த வகையில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதிஸ்டாலினை போலீஸார்,கைது செய்தனர்.

இந்தநிலையில் அவரின் கைதை கண்டித்து ஆங்காங்கே திமுகவினர் மறியல்போராட்டம் செய்தனர். திருச்செந்தூரில் அனிதாராதாகிருஷ்ணன் தலைமையில் திரண்டு மறியல் போர் நடத்தினர்.

இந்த மறியல் போராட்டத்தில், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்கோலை ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகர பொறுப்பாளர் சுடலை, காயல்பட்டினம் நகர பொறுப்பாளர் முத்து முகமது, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராஜபாண்டி ஜெபராஜ் தர்மராஜ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் இளங்கோ, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் கிருபா, திருச்செந்தூர் ஒன்றிய முன்னாள் இளைஞரணி செயலாளர் சுரேஷ், முன்னாள் கவுன்சிலர் சுதாகர், மாவட்ட விவசாய தொண்டரணி அமைப்பாளர் ராஜ்மோகன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here