காமராஜ் கல்லூரியில் காவலர் தேர்வு பயிற்சி பெற்றவர்களுக்கு இலவச கையேடுகள்

0
39
kamaraj collage

தூத்துக்குடி:

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் காவலர் தேர்வு பயிற்சி பெற்று வருபர்களுக்கு இலவசமாக பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் 60ஆண்கள், பெண்கள் இருபிரிவுகளாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், காவலர் தேர்வுக்கான பயிற்சி பெற்று வருபவர்களுக்கு இலவச பயிற்சி கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி சிவில்சப்ளை பறக்கும்படை தாசில்தார் ஞானராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சிக்கான கையேடுகளை வழங்கினார்.

இதில், கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் சரவணன், என்.எஸ்.எஸ்.திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் தேவராஜ், பேராசிரியை பொன்னுத்தாய் மற்றும் பாபுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here