நாசரேத்,நவ.30:நாசரேத்தில் நடந்த கிறிஸ்துமஸ்,புத்தாண்டு சிறப்புநிகழ்ச் சியில் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,பங்கேற்று சிறப்பித்தார்.
பெனியேல் டி.வி., டிவைன் சிங்கர்ஸ்., பிஓடி மீடியா இணைந்து பாடகர்,பாடகிகள், இசைக்கலைஞர்கள் பங்கேற்ற கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடிய கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருச் செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறந்த பாடகர், பாடகிகள்,சிறந்த இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன் வாழ்த் துரை வழங்கினார்.சர்ச் ஆப்காட் சபைபோதகர் டேனியல்பிரைட் கிறிஸ்து மஸ் செய்தி வழங்கினார். திமுக மாநில மாணவரணி துணை அமைப்பா ளர் எஸ்.ஆர்.எஸ். உமாpசங்கர், நாசரேத் நகர வணிகர் சங்கத் தலைவர் ஜெபஸ் திலகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிறைவாக டிவைன் ஆர்கெஸ்ட்ரா நிறுவனர் இராஜ்குமார் நன்றி கூறினார். விழாவில் மாவட்ட திமுக அவைத் தலைவர் அருணாச்சலம், நாசரேத் நகர திமுக செயலாளர் ரவிசெல்வக்குமார்,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தம்பு என்ற அருண் சாமுவேல், திமுக மாவட்ட பிரதிநிதிகள் அன்பு தங்கபாண்டியன்,சாமுவேல்,தொண்டர்படை ஞானராஜ், வார்டு செயலாளர் அதிசயமணி நல்லதுரை, வழக்கறிஞர் கிருபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.