சாத்தான்குளம், நவ. 30:
சாத்தான்குளம் அருகே மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கொட்டங்காடு அணி வென்று முதல் பரிசு மற்றும் கோப்பையை தட்டிச்சென்றது.
சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்தில் பாஜக சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் 2நாள்கள் நடைபெற்றது. போட்டியில் சித்தன்குயிருப்பு, படுக்கப்பத்து, உடன்குடி, திசையன்விளை, தட்டார்மடம், உசரத்துக்குடியிருப்பு, குட்டம், வாலத்தூர் உள்ளிட்ட 15க்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதிபோட்டியில் கொட்டங்காடு அணியும், உடன்குடி மருந்தூர்கரை பேட் பாய்ஸ் அணியினரும் மோதினர். இதில் கொட்டங்காடு அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றது.
அதனைத் தொடர்ந்து படுக்கப்பத்தில் நடந்த பாஜக கொடியேற்றுவிழாவில் கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் அங்கு வேல்யாத்திரை விளக்க கூட்டமும் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் உடன்குடி சிவமுருகன் ஆதித்தன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் கணேசன், மாவட்ட பிரசார பிரிவு துணைத் தலைவர் சரவணன், பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவர் சித்ராங்கதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பாஜக தலைவர் செந்தில் வரவேற்றார். இதில் 100 இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர். இதில் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் பாலமுருகன், மாவட்ட மருத்துவர் பிரிவு தலைவர் பூபதி பாண்டியன், ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து போட்டியில் முதல் இடம் பிடித்த கொட்டங்காடு அணிக்கு ரூ 10 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை மாவட்ட பிரசார பிரிவு துணைத் தலைவர் சரவணன், 2ஆம் இடம் பெற்ற உடன்குடி மருத்தூர்கரை பேட்பாய்ஸ் அணியினருக்கு ரூ 7ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவர் சித்ராங்கதன், 3ஆம் இடம் பெற்ற தேரியூர் அணிக்கு ரூ 5000 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை மாவட்ட பாஜக துணைத் தலைவர் சிவமுருகன் ஆதித்தன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். 4ஆம் இடம் பெற்ற சிவன்குடியேற்று அணிக்கு ரூ 3000 பரிசும், ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதில் மாநில மகளிரணி துணை அமைப்பாளர் நெல்லையம்மாள், மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் மகேஸ்வரன், அழகப்பபுரம் ஊராட்சித் தலைவர் கணேசன், உடன்குடி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தலைவர் சுவாமிநாதன், சாத்தான்குளம் ஒன்றிய இளைஞரணி தலைவர் இன்பஅருள், ஒன்றிய துணைத் தலைவர்கள் ஆதித்தன், ஜெயசுந்தர்ராஜ் மற்றும் பாஜக பிரமுகர்கள் சுடலைக்கண், நடராஜன், பரமசிவன், செல்வகணபதி, சக்திக்குமார், சித்திரைவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.