தூத்துக்குடியில் தமிழர் பாரம்பரிய கலைக் கண்காட்சி திருவிழா – ஜனவரி 10 முதல் 12 வரை நடக்கிறது !

0
933
tamilanda

தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் ,தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி,சுரபி அறக்கட்டளை,ஷைன் யோகா பவர் மற்றும் வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொது நலசங்கம்,சகா கலைக்குழு,ஆக்ட்டிவ் சோஷியல் டிரஸ்ட், ஜெகஜீவன் கலைக்குழு இணைந்து நடத்தும் தமிழன்டா – 2020 தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையத்தின் தலைவரும் நாட்டுப்புற பாடகரும் , தமிழன்டா 2020 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ஜெகஜீவன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

’தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் இன்று நலிவடைந்து வருகிறது.அதை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்கின்ற எண்ணத்தில் ,கரகம் , ஒயில் , தப்பாட்டம் , காவடி , பொய்க்கால் குதிரை , மான் ஆட்டம், மயிலாட்டம் , மான் கொம்பு ஆட்டம் , காளி ஆட்டம் , அம்மன் ஆட்டம் , கருப்பசாமி ஆட்டம் , பாம்பை , மேலும் பல …இசை துறையில் , கிராமிய பாடல் , நாதசுவரம் , தவில் , பம்பை ஓலி ,சிலம்பு,யோகா, உறுமி , இதர தோல் கருவிகள் ..என தமிழகத்தில் பரவிக்கிடக்கும் கலைகளையும் ஒன்றிணைக்கும் விழா தூத்துக்குடியில் தமிழன்டா…. தமிழர் பாரம்பரிய கலைக் கண்காட்சி திருவிழா – 2020 : ஜனவரி 10ம் தேதி , 11ம் தேதி , 12ம் தேதி , ஆகிய நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவ , மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் , முதியோர்களுக்கும் போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் முதல் நாள் 10ம் தேதி வெள்ளிக்கிழமை 1.பாரம்பரிய வீட்டு மற்றும் கலைப்பொருள்கள் கண்காட்சி,2.பாரம்பரிய உணவுத்திருவிழா ,3.பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்,4.பாரம்பரிய கிராமிய கலைப்போட்டிகள் ,5.உணவே மருந்து புத்தக வெளியீடு,6.தமிழன்டா ஒலிப்பேழை வெளியீடு மற்றும் 300 க்கும் மேற்பட்ட தென் மாவட்ட கிராமிய கலைஞர்களுக்கு தூத்துக்குடியில் விருது வழங்கும் விழா, .3-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று நோயில்லாமல் வாழ வேண்டுமா? எந்த உணவுகளை எல்லாம் சாப்பிடவேண்டும்,தண்ணீர் எப்படி குடிப்பது,இயற்கை உணவு முறைகள்,இயற்கை உணவு என்றால் என்ன? ,மனிதன் சைவமா? மனிதன் ஒரு பழந்தின்னி (Frugivorous),பால் மற்றும் முட்டை & சைவமா, அசைவமா?, விலங்கின புரதம் குறித்த உண்மைகள் ,இயற்கை உணவு உண்டால் நடப்பது என்ன?

கழிவுகளின் நீக்கம் எவ்வாறு நடக்கும்?,கழிவுகள் நீங்கும் போது செய்ய வேண்டியது என்ன? சிகிச்சையின் போது நினைவில் கொள்ளவேண்டியவை,பொதுவாக நினைவில் கொள்ள வேண்டியவை சைவ, அசைவ மற்றும் இயற்கை உணவிற்குள்ள வித்தியாசங்கள்,இயற்கை உணவும் சுவாசமும் இயற்கை உணவு உண்ண ஆரம்பிப்பது எப்படி?,இயற்கை உணவு எவ்வாறு உண்ணவேண்டும்? யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ், உடற்பயிற்சிகள் & சில உண்மைகள் ,இயற்கை சிகிச்சை முறைகள்

இரத்தமும் இயற்கை உணவும் ,அக்குபிரசர் (ஒருவரின் குணத்தை மாற்றுவது எப்படி?) உண்ணா நோன்பு ,ஜீரண சக்தியை அதிகரிக்க ,சிறுநீரக நோயாளிகள் தண்ணிர் குடிக்கலாமா? எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும்? இயற்கை உணவிற்கு மாற மனக்கட்டுப்பாடு பெறுவது எப்படி? மனரீதியாக தயாராதல் ,சிரிப்பும் ஆரோக்கியமும்,இயற்கை உணவு குறித்த பொன்மொழிகள் இயற்கை குளிர் சாதனப்பெட்டி,ஏ.சி & வரமா, சாபமா?இயற்கை* உணவினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் சில இயற்கை உணவு குறிப்புகள்,போன்றவை குறித்து கருத்தமர்வு நடைபெறுகிறது.

பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் மாலையில் 300க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு விருதுகள்,பரிசுகள் வழங்கப்படுகின்றன. பாளையங்கோட்டை சாலையில் உள்ள தூத்துக்குடி தூய மரியண்ணை ஆண்கள் மேல் நிலையப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. நோயில்லாமல் வாழுவோம்,உணவே மருந்து என்பதை நிரூபிப்போம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்புக்கு Cell : 9791780068 E-Mail: onetamilnews@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here