புதூர் பள்ளி வளாகத்தில் வைத்து ஆசிரியர் வெட்டி கொலை – விளாத்திகுளம் அருகே சம்பவம்

0
69
vkm news

விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டியை சேர்ந்த பால்பாண்டியன் மகன் வடிவேல்முருகன்(40). இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையத்தில் சிறப்பு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி ஆர்.சி.தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் கிரேஸி(29) என்பவருக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரோஸி ஏஞ்சல் (4) என்ற மகள் உள்ளார்.

கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே அருப்புக்கோட்டை அருகே சொக்கலிங்கம்புரத்தை சேர்ந்த பிரியா (28) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வடிவேல்முருகன் இன்று வழக்கம் போல் வேலையில் இருந்தார். அவரை தேடி கிரேஸியின் தம்பி அற்புத செல்வம் என்ற ஆஸ்டின்(27) வந்தார். இருவரும் பள்ளி வளாகத்துக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அற்புத செல்வம், வடிவேல் முருகனை கத்தியால் குத்தினார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். யாரும் காப்பாற்ற முன் வரவில்லை. அதிகளவு கத்திக்குத்துப்பட்ட வடிவேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வடிவேல் முருகன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அற்புத செல்வம் என்ற ஆஸ்டினை போலீஸார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here