தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.20கோடியில் குடிநீர்மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

0
10
download (23)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் மாற்று திறனாளிகளால் நடத்தப்படும் புதிய உணவக திறப்புவிழா இன்று நடைபெற்றது. மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்த உணவகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மகளிர் திட்டத்தின் மூலமாக மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனங்களை பணிபுரியும் மாற்றுத்திறனாளி பெண்கள் 15 பேருக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் குறை தீர்க்கும் நாளில் ஒவ்வொரு வாரமும் மாற்று திறனாளிகள் வேலை வாய்ப்பு கேட்டு மனு அளிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க முடியாது என்பதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இந்த உணவகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் அமைக்க இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு பங்களிப்பில் நிதியுதவி வழங்கியுள்ளது.
இதன் மூலம் பிற மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு அடைவார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 90 சதவீதம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மழை இல்லாமல் போனாலும் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது. தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் பற்றா குறை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் 20 கோடி ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தூத்துக்குடியில் ஆகஸ்ட் மாதம் புத்தக கண்காட்சி பத்து நாட்கள் நடத்தப்பட உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here