சாலையில் சுற்றி திரியும் ஆதரவற்றவர்களை மீட்டு குடும்பத்தினருடன் சேர்க்க முயற்சி – தூத்துக்குடிகலெக்டர் தகவல்

0
83
thoothukudi collector

கோவில்பட்டி,டிச.19:

சாலையில் சுற்றி திரியும் ஆதரவற்றவர்களை மீட்டு, உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, குடும்பத்தினருடன் சேர்க்க முயற்சி எடுக்க உள்ளதாக கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட டிகலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’முடுக்குமீண்டான்பட்டியில் செயல்பட்டு வரும் மனநல காப்பகம் இன்று ஆய்வு செய்யப்பட்டது. சமீபத்தில் புயல் மழை சமயங்களில் ஆதரவற்றவர்கள், மனநலம் குன்றியவர்கள், கேட்பார் அற்றவர்கள் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கோவில் மற்றும் சர்ச் பகுதிகளிலும் இருப்பதை கண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் இரவு நேரங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 15க்கும் மேற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு இங்கே கொண்டு வரப்பட்டு ஆக்டிவ் மைன்ட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

பெண்களுக்கான காப்பகம் இங்கே உள்ளது. ஆண்களுக்கான காப்பகம் எட்டயபுரம் செமப்புதூரிலும் உள்ளது. பெண்கள் இங்கும், செமப்புதூரில் ஆண்களும் தனித்தனியாக பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்கள் காப்பகத்தில் 36 நபர்களும், ஆண்கள் காப்பகத்தில் 32 நபர்களும் உள்ளார்கள். முடுக்குமீண்டான்பட்டி காப்பகத்தில் ஆக்டிவ் மைன்ட்ஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மனநலத்திற்கு தேவையான மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படுகிறது. இதற்கு தனியாக பதிவேடுகளும் பராமரிக்கப்டுகிறது.

காவல் துறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு யாரேனும் காணவில்லை என்று வந்தால் அவர்களின் உறவினர்களிடம் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவியுடன் அவர்கள் மீண்டும் தங்களது சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு அவர்கள் சொந்த கிராமத்தை கண்டறிந்து அங்கு அவர்கள் உறவினருடன் சேர்த்து வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவர்களை குணப்படுத்தி சமுதாயத்துடன் இணைந்து வாழ வைப்பதே இதன் நோக்கம் ஆகும்’’ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here