திருச்செந்தூர் சட்டசபை தொகுதி இறுதி வாக்காளர் பட்டியல் – ஆர்.டி.ஒ., தனப்பிரியா வெளியிட்டார்

0
97
tcr

திருச்செந்தூர், டிச. 23

திருச்செந்தூர் சட்டசபை தொகுதி இறுதி வாக்காளர் பட்டியலை ஆர்.டி.ஒ., தனப்பிரியா வெளியிட்டார். இதில் மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 891 வாக்காளர்கள் உள்ளனர். இத்ததொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. திருச்செந்தூர் சட்டசபை தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் ஆர்.டி.ஒ., தனப்பிரியா வெளியிட்டார். இதில் மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 891 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 182 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்த 19 ஆயிரத்து 694 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

இதுகுறித்து ஆர்.டி.ஒ., தனப்பிரியா கூறியதாவது, வாக்காளர் பட்டியல் திருத்தம் வரும் ஜனவரி 22ம் தேதி வரை நடக்கிறது. மேலும் 2020 ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாக கொண்டு புதிய வாக்காளர்களில் தகுதியானவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் ஜனவரி 25ம் தேதி அந்தந்த வாக்குசாவடிகளில் புகைபட அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். மேலும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் அந்தந்த வாக்குசாவடிகளில் ஜனவரி 22ம் தேதி வரை செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் தாசில்தார் ஞானராஜ், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சுந்தர்ராகவன், வருவாய் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், வி.ஏ.ஒ., கணேசபெருமாள், தேர்தல் உதவியாளர் பாலகங்காதரன் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here