அனைவருக்கும் நடுநிலை.காம் -ன் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்

0
159
nadunilai news

மக்களின் நம்பிக்கை பெற்ற நடுநிலை.காம் சார்பில் முதல் முயற்சியாக நடுநிலை நியூ-ஸ் சிறப்பு இதழ் வெளியிட்டுள்ளோம். இந்த இதழுக்கு விளம்பரங்கள் அளித்து ஆதரவு நல்கிய அனைவருக்கும் இவ்விதழ் மூலமாக நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறோம்.

கடந்த ஆண்டில் நடந்த நல்லவைகளை நினைப்போம். கெட்டவைகளை மறப் போம். 2021ம் ஆண்டில் அனைத்துமே நல்லவைகளாக நடக்க வாழ்த்தும் அனை வருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கலை, கலாச்சாரம், வீரம் என பல்வேறு உயர்ந்த அம்சங்களில் சிறந்து விளங்கும் தமிழ் மக்கள் விவசாயத்தை எல்லாவற்றிக்கும் மேலே வைக்க கூடியவர்கள். விவசாயம் சார்ந்த ஒவ்வொரு செயல் களையும் விழா எடுத்துக் கொண்டாடு பவர்கள். விதையை உலர வைப்பது, ஊற வைப்பது, விதைப்பது, முளை கண்டதும் மகிழ்ச்சி கொள்வது, நாற்று நடும்போதும், பயிர் வளர்ந்ததும், கதிர் கண்டதும், கதிர் முற்றியதும், அறுவடையின்போதும் பாட்டுப்பாடி ஆனந்தம் கொள்வது, அறுவடை முடிந்ததும் விழா எடுத்து கொண்டாடுவது, அறுவடை செய்த நெல்மணிகளை வைத்து பொங்கலிட்டு குலதெய்வ வழிபாடு செய்வது, விதை, நெல் ஆகுவதற்கு காரணமான சூரியனை நன்றியோடு வணங்குவது எல்லாம் தமிழ் மக்களின் தனிச்சிறப்பு. சூரியபகவானுக்கு நன்றி சொல்லும் நாளே பொங்கல் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐப்பசி, கார்த்திகை மாத மழைகாலம், மார்கழி குளிர்காலத்தின் போது பழுதான மற்றும் பழைய பொருட்களை போக்குகிற அதாவது கழிக்கிற நாளாக போகிப் பண்டிகை கொண்டாப்படுகிறது. அந்நாளில் குடியிருப்புகளில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு எரித்துவிடுவது அல்லது அப்புறப்படுத்துவது வழக்கமாகும். வெள்ளையடித்து வீட்டை சுத்தமாக்கி தை முதல் நாளில் ஒவ்வொருவர் வீடும் புத்தம் புதியதாக காட்சியளிக்கிறது.

புதுப்பிக்கப்பட்ட வீட்டின் முன்பாக புத்தம் புதிய மண்பானையில் பச்சரியை கொண்டு பொங்கலிடப்படுகிறது. வாழைத்தார், முழு கரும்பு, அச்சு வெல்லம், மஞ்சள் குலை வைத்து வழிபடுவது வழக்கம். அனைத்து வகை காய்கறிகளையும் கொண்டு குழம்பு தயாராகிறது.

தமிழ்நாட்டு மக்கள் இத்தனை பொருட்களையும் வாங்கும் போது அந்த பொருட்களை உற்பத்தி செய்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. வழக்கமான இந்த சடங்குகளின் மூலம் வேளாண் உற்பத்தி உறுதி செய்யப்படுகிறது. அதன் மூலம் விவசாயம் நிலைத்து நிற்கிறது.

தயார் செய்யபட்ட உணவுப்பொருட் களை சூரியனுக்கு படைத்து வணங்கி நன்றி தெரிவிப்பது, விவசாய வேலைக்கு உற்றத் தோழனாக இருக்கும் மாடுகளுக்கு மரியாதை செய்வது, மாடுகளுக்கென்றே மாட்டுப்பொங்கல் நடத்துவது, இதெல்லாம் வெறும் சடங்காக இருந்துவிடாமல் ஆங்காங்கே விளையாட்டுபோட்டிளும் ஜல்லிக்கட்டு மற்றும் கபடி விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. இந்த திருநாட்கள் மூலமாக அன்று முதல் இன்றுவரை தமிழன் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதே தனிச்சிறப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here