நெல்பயிரில் இலை சுருட்டுப்புழுவை எப்படி கட்டுபடுத்தலாம் – விளக்கம் அளிக்கிறார் வேளாண்மை அதிகாரி

0
169
agri news

ஸ்ரீவைகுண்டம்,ஜன.07:

நெல்பயிரில் இலை சுருட்டுப்புழுவை கட்டுபடுத்துவது குறித்து வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து, ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஊமைத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீவைகுண்டம் யூனியனில் 2ஆயிரத்து 500 எக்டேரில் நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நெற் பயிர் நடவுப்பணி முடிந்த இடங்களில் 10 முதல் 30 நாட்கள் வயதுடைய பயிர்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உள்ளான நெல் பயிரின் இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். இதிலுள்ள சுருட்டுப்புழு பயிருடைய இலைகளின் பச்சையத்தை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறிவிடும். இது மேலும் அதிகமானால் வயல் முழுவதும் வெள்ளை நிறமாக மாறிவிடும். இவ்வாறு தென்பட்டால் இலை சுருட்டுப்புழு தாக்குதல் உள்ளது என்பதை அறியலாம்.

இந்த சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்திட ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை முறைகளை மேற்கொள்ளவேண்டும். அதாவது விளக்குப்பொறியை வயலில் வைத்து புழுக்களை உருவாக்கும் தாய் அந்துப்பூச்சிகளை கண்காணித்து அழிப்பதோடு வயல் வரப்புகளையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை ஏக்கருக்கு 2சி.சி என்ற அளவில் வயலில் ஆங்காங்கே கட்டி பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கலாம். ஏக்கருக்கு வேம்பு பூச்சி கொல்லி அசாடிராக்டின் 1 சதவீத இசி 400மிலி அல்லது ராசயன பூச்சி கொல்லியான குளோலீஜீபைலீஜீபாஸ் 20சதவிதம் இசி 500மிலி அல்லது பாசலோன் 35இசி 600மி.லி அல்லது டிரைஅசோபாஸ் 400மில் அல்லது குளோரான்டிரானிலிப்புரோல் 60 மிலி என்ற அளவில் கைதெளிப்பான் மூலம் பயிர்கள் நன்கு நனையும்படி தெளிக்கவேண்டும்.

இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here