சாத்தான்குளம்: மின்சாரம் பாய்ச்சி பெண்ணை கொல்ல முயற்சி

0
12
sathankulam

சாத்தான்குளம ஜன.7:

சாத்தான்குளம் அருகே வீட்டில் மின்சாரம் வைத்து பெண்ணை கொலை செய்ய முயன்றதாக தந்தை மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தைச் சேர்ந்தவர் ராமையா மகன் சுப்பையா (வயது 48) இவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த வேம்பு என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக ஒரு வருடமாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் சுப்பையா சரத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்டதன் பேரில் கடந்த 4ஆம் தேதி நில அளவீடு செய்ததில் இந்த பிரச்சனை தீர்வு ஏற்பட்டது இந்நிலையில் கடந்த 5ஆம்தேதி சுப்பையாமனைவி சரஸ்வதி (வயது 45) வழக்கம்போல் வீட்டு முற்றம் பெருக்க வீட்டு வாசல் கேட்டைத் திறந்தார்.

அப்போது அதில் இருந்த மின்சாரம் தாக்கியதில் தூக்கியெறியப்பட்டார். உடன் உறவினர்கள்அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதில் வேம்பு, அவரது மகன் சுடலைமுத்து ஆகியோர் சுப்பையா வீட்டுக் கதவில் மின்சார இணைப்பு கொடுத்து அவரது குடும்பத்தினரை கொலை செய்ய முயன்றுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து சுப்பையா சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் முத்துமாரி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வேம்பு, அவரது மகன் சுடலைமுத்து ஆகியோரை தேடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here