தூத்துக்குடி, ஜன.11:
முத்தையாபுரம் வாதிரியார் சமுதாய இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: எங்களது வாதிரியார் சமுதாயத்தை கலாச்சாரம், பண்பாட்டில் முற்றிலும் எதிர்மறையான மாற்று சமுதாயமான பள்ளன், குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான் ஆகிய ஆறு பிரிவுகளுடன் இணைந்து ஒரே பெயரில் அழைக்க தமிழக அரசு பரிந்துரை செய்யக்கூடாது.
கடந்த 27.2.2019ல் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட ஹன்ஸ்ராஜ்வர்மா தலைமையில் 6உட்பிரிவுகளை இணைத்து அரசாணை வெளியிட ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் எங்களின் கோரிக்கையை ஏற்று அந்த ஆய்வுக்குழுவில் எமது வாதிரியார் ஜாதி பெயரை நீக்கம் செய்தனர்.
இந்நிலையில், ஆன்லைன் மூலம் வழங்கப்படும் வாதிரியார் ஜாதி சான்றிதழ்களில் வதிரியன் என தவறாக பதிவிடப்படுவதை திருத்தி வாதிரியான் என சரியாக பதிவிட நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.