தூத்துக்குடி, ஜன.11:
தூத்துக்குடி ராஜலெட்சுமி கல்வி குழுமங்களின் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி ராஜலெட்சுமி கல்விக் குழுமங்களில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ராஜலெட்சுமி கல்வியியல் கல்லூரி மற்றும் ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக வாகைக்குளத்திலுள்ள கல்லூரி வளாகத்தில் சமூக இடைவெளியுடன் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்களின் சேர்மனும், முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளருமான ஆறுமுகநயினர் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஆறுமுகம்கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜலெட்சுமி ஆறுமுகநயினார் குத்து விளக்கேற்றி பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார்.
விழாவில், ராஜலெட்சுமி கல்வி நிறுவன குழுமங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டு அரசின் வழிகாட்டுதல்படி சமூக இடைவெளியைப் பின்பற்றி சமத்துவப் பொங்கல் கொண்டாடினர். இதில், ராஜலெட்சுமி கல்விக் குழுமங்களின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் டாக்டர்.சுகன்யாசம்பத், டாக்டர்.ஜெயலலிதாகருப்பசாமி மற்றும் டாக்டர்.சுமதி ஆறுமுகம்கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராஜலெட்சுமி கல்விக் குழுமங்களை சேர்ந்த கல்லூரி முதல்வர்கள், பேராசியர்கள், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.