சென்னையில் மசாஜ் வடிவில் பாலியல் – போலீஸ் அதிரடி ரெய்டு

0
7
masaaj news

குற்றங்கள் தானாக நடந்துவிடுவதில்லை. அதற்கு திட்டங்கள் வகுக்கப்படுகிறது. அப்படி வகுக்கப்படும் திட்டங்களை களைவதற்கும் திட்டங்கள் வகுக்கப்படுகிறது. அப்படி வகுக்கப்படும் திட்டங்களில் எது பெரியது என்பதே இப்போது கேள்வி?. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மசாஜ் வடிவில் பாலியல் தொழில் நடத்தப்படுவதும். அதை அவ்வப்போது போலீஸார் தடுத்து நிறுத்துவதும், மீண்டும் அது முளைத்துக் கொண்டு வருவதும் வாடிக்கையாகிவிட்டது. இதை தீர்க்கமான முடிவால்தான் தடுக்க முடியும்.

சென்னை அடையாறு எஸ்பிஐ காலனியில் இதுபோன்று மசாஜ் வடிவில் பாலியல் தொழில் நடத்தப்படுகிறது என சொல்லப்பட்ட தகவலை வைத்து போலீஸ் அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கே விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பெண்களை வைத்து மசாஜ் சென்டர் நடத்தியதையும் அடையாறு காந்திநகர் பகுதியில் ஒரு அப்பார்ட் மென்ட்ல் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த பெண்களை மீட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here