பொங்கல் பண்டிகையால் பூக்களின் விலை உயர்வு

0
11
news

தூத்துக்குடி,ஜன.13:

பொங்கல் பண்டிகை காரணமாக தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ தற்போது ஒரு கிலோ ரூ.3ஆயிரத்து 500க்கும், பிச்சிப்பூ ரூ.ஆயிரத்து 500க்கும், கேந்திப்பூ ரூ.350க்கும்,செவ்வந்திப்பூ கிலோ ரூ.300க்கும் விற்பனையாகி வருகிறது. கனகாம்பரம், ஊட்டி ரோஜா போன்றவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

பூக்களின் விலை வழக்கத்தைவிட பலமடங்கு உயர்ந்தபோதும், தொடர்ந்து விடாமல் பெய்து வரும் மழையின் காரணமாக பூக்களை வாங்க பூக்கடைகளில் மக்களும் இல்லை. பூ விலை உயர்வு குறித்து தூத்துக்குடி பூ மார்க்கெட் பூ வியாபாரி பிளவர்பட்டு ராஜன் கூறியதாவது,

தொடர் மழையினால் மல்லிகை, பிச்சிப்பூக்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. கூடுதல் விலை கொடுத்து நாங்கள் பூக்களை வாங்கி விற்பனைக்கு வைத்துள்ளோம். இருந்தபோதும், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து விடாமல் பெய்து வரும் கனமழையால் பூக்களை வாங்க வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here