குத்தகைதாரிடமே வெள்ள நிவாரணம் தரவேண்டும் – தூத்துக்குடி கலெக்டரிடம் கோரிக்கை

0
69
collector news

தூத்துக்குடி,ஜன.25:

தூத்துக்குடி மாவட்டத்தில் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மழை வெள்ள நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ் விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு: மழை நிவாரணம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கடந்த 19ம் தேதி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தோம். அப்போது மாவட்ட கலெக்டர் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குத்தான் நிவாரணம் அளிக்கப்படும் என உறுதி அளித்தார். இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.

ஆனால் தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள் குத்தகைதாரர்களிடம் மனு வாங்க மறுக்கிறார்கள். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் 60சதவீதம் பேர் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்யும் விவசாயிகள்தான் இருக்கிறார்கள்.

எனவே குத்தகை சாகுபாடியாளர்களுக்கு மழைகால நிவாரணம் கிடைக்க மாவட்ட கலெக்டர் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here