அத்துமீறும் விவசாயிகள் – வேடிக்கை பார்க்கும் அரசு

0
27
vivasai news

மத்தியரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் உச்ச கட்டமாக குடியரசு தின நாளான இன்று டிராக்டரில் டெல்லி செங்கோட்டையை நோக்கி பயணம் என போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி இன்று டிராக்டரில் பயணம் நடைபெற்றது. செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் தடையை மீறி பேரிகார்டை அகற்றிக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். அப்போது காவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு மற்றும் கண்ணீர் புகை வீச்சு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

தொடர்ந்து செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகளில் ஒருபிரிவினர், அங்கு அத்துமீறி நுழைந்து அங்குள்ள கொடி கம்பத்தில் ஏறி அசாதார சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர். எத்தனை பெரிய கோரிக்கை என்றாலும் அதை சொல்லுகிற விதமாக சொல்வது மட்டுமே நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது. ஜனநாயகம் என்கிற பெயரில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்தால் நிர்வாகத்தை நடத்தமுடியாமல் போய்விடும் என்பதை அவர்களை வழிநடத்தும் அரசியல் கட்சியினர் உணர வேண்டும்.

அத்துமீறல் என்பது அசாதாரண நிலையை உருவாக்கும். அசாதாரண நிலையை அடக்க அதிகாரிகள் அத்துமீற வேண்டிய நிலை ஏற்படும். அப்படி அதிகாரிகள் அத்துமீறும் நிலை ஏற்படும்போது, போராட்டக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைப்போர் நினைக்கிறார்கள் என்றால், அந்த சட்ட திருத்தம் சரியானதா? தவறானதா? விவசாயிகளின் கோரிக்கை கோரிக்கை சரியானதா? என்பதெல்லாம் அலசி ஆராய வேண்டியது உள்ளது. அது குறித்து நீதி மன்றம் விசாரித்து வருகிறது. நீதிமன்ற கோரிக்கையை கூட ஏற்கமாட்டோன் என்பதுபோல் பிடிவாதமாக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அதில் எதோ உள்நோக்கம் இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

முதலில் குடியரசு தினமான இன்று அவர்கள் போராட்டம் செய்வதற்கு முடிவு செய்ததே தவறானது. அவர்கள் இந்த அரசியல் அமைப்பை கொச்சைப்படுத்துகிறார்கள் என்றுதான் அர்த்தம். அனைவரும் ஏற்கும் ஆதரிக்கும் உயர்வாக மதிக்கும் குடியரசு நாளை சீர் குலைக்கும் செயலாகவேதான் பார்க்க முடிகிறது. கோரிக்கை என்கிற பெயரில் நாடு முழுதும் விவசாயிகளை அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ செய்யும் செயலாகத்தான் பார்க்க முடிகிறது.

லட்சக்கணக்கில் கூடுவோம் என மிரட்டும் போராட்டத்திற்கு டெல்லி போலீஸார் அனுமதி கொடுத்திருப்பது ஒரு விதத்தில் ஏற்கும்படியாக இருந்தாலும் குடியரசு தினத்தன்று அனுமதி கொடுத்திருபது ஏற்கும்படியாக இல்லை. இந்த கிளர்ச்சியை அடக்க அரசு பலவந்தமாக செயல்பட்டால், அதில் ஏற்படும் இழப்பிற்கும் அரசே பதில் சொல்ல வேண்டியது உள்ளது. அதைத்தான் போராட்டக்கரர்களும் அவர்களை இயக்குவோர்களும் எதிர்பார்க்கிறார்கள் போல் தெரிகிறது.

இதுவரை நடந்துவிட்டது நடந்துவிட்டதாகவே இருக்கட்டும். இன்றோடு அவர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீதி மன்றம் சொல்வதுபோல் சிறப்பு குழுவிடம் விவசாயிகள் கோரிக்கையை வைக்க வேண்டும். அதுதான் சரியானதாக இருக்க முடியும். இல்லாவிட்டால், இது வெறும் அரசியலாகத்தான் பார்க்க முடியும். இவ்வளவு மென்மையான அனுகுமுறை அரசு நிர்வாகத்தை செயல் இழக்க செய்துவிடும். அதை அரசு உணர வேண்டும். நிறைவேற்றப்பட்ட சட்டம் சரியானதுதான் என்பதாக இருந்தால், இந்த அளவு அதற்கு எதிரான போராட்டத்தை அனுமதித்திருக்க கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here