தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம்

0
146
tntce

தூத்துக்குடி, ஜன.30:-

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக துவங்கவேண்டும், தொழிலாளர்களுக்கான பணப்பலன்களை தாமதமின்றி வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி பழைய பஸ் நிலைய பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, தொமுச துணை செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். சிஐடியூ ஜான்கென்னடி மாணிக்கம், தொமுச நகர செயலாளர் மரியதாஸ், ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொமுச தலைமை நிலைய செயலாளர் கருப்பசாமி போராட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். இதில், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, தொமுச செயலாளர் முத்துராஜ் தலைமை வகித்தார். சிஐடியூ செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். சிஐடியூ பிச்சைமணி, தொமுச தங்கபெருமாள் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில், பலர் கலந்துகொண்டனர். இதுபோன்று ஸ்ரீவைகுண்டத்திலும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here