தூத்துக்குடியில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் – பதவி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்

0
44
health

தூத்துக்குடி, ஜன.30:

தூத்துக்குடியில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் பதவி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கொரோனா காலத்தில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர் நிலை 2பிரிவினருக்கு சுகாதார ஆய்வாளர் நிலை 1பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தூத்துக்குடி சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், மந்திரராஜன், துணைத்தலைவர் மகாராஜன், துணை செயலாளர் சங்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here